Tuesday, 19 May 2015

யார் இங்கு பைத்தியம் ..?


குப்பை கூள அழுக்குகளை
சொத்தாக சேகரித்து
மேல்கட்டி அலைந்து

குளிக்காத மேனியுடை
சுகந்தமென வாழ்பவன்

உற்றுப் பார்க்கின்...
பொய் களவு
வஞ்சக துரோக
வனப்பு உடுத்தாத
உள் மன சுத்தமானவன்...

யார் இங்கு பைத்தியம் ..?

வெளி
அழகனா...??
அழுக்கனா.???

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..