Tuesday, 19 May 2015

சமர்ப்பணம் அன்னையே


தாய்மை வடிவான மேன்மையே போற்றி
தனித்துவமான வாய்மையே போற்றி

தன்னார்வ நேர்மையே போற்றி
தன்னம்பிக்கை பொறுமையே போற்றி

தாளாவினை களைந்து தனி ஒருவழி தருபவளே
எங்கும் எதிலும் உயர்வாய் உயிராய் நிறைந்த ஒளிச்சுடரே

வாடும் பிள்ளை மனம் வசந்தம் சேர்க்கும் பிரியமே
கதியென உந்தன் காலடி சரணமடைய
கண்ணிமையென காக்கும் வேத சத்தியமே

என்றும் உம் மலரடி சரணம் சரணம்...சமர்ப்பணம் அன்னையே

ஓம் ஆனந்தமயி..சைத்தன்ய மயி சத்யமயி பரமே !!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..