Tuesday, 19 May 2015

கொதி மன உலைகளம்


தோண்டிப் புதைத்தாலும்
அடக்க மறுக்கிறது
தொப்புள்கொடி அறுந்த வேதனை

முள்ளிவாய்கால் காற்றெங்கும்
கழுகளின் சுவாசம் ருசிக்கும்
கனத்த பிணவாடை

செத்ததைவிட
செய்வதறியாது திகைத்து
அனாதை வலி கிடக்கும்
மனிதன் மனம் பிசைகிறான்

ஒரு சரித்திரத்தை வீழ்த்தி விட்டு
தரித்திரம் ஆள்கிறது
மண்பிடி சாபம்

பார்த்து கேட்டு...எத்தனை கடந்தாலும்
எங்கோ ஒரு நினைவு
படமாய் மொழியாய் தட்ட

கையறுநிலை,,,கண்ணீர் குருதியாய் வடிய
அத்தனை எளிதாய்
கடந்துதான் விட முடியவில்லை

ஈழத் தமிழனின்
கொதி மன உலைகளத்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..