Tuesday, 26 May 2015

அக்கா எனும் அன்னையே

அன்பின் உருவமாய்
ஆலயத் திரு வடிவமாய்
அமுத மொழிகள் கொஞ்சி
ஆனந்த பிரியமேந்தி

அழகு செழித்த களைமுகமே
அக்கா எனும் அன்னையே Malar Madeshwaran

ஆண்டுகள் பலதவமிருந்தேனா
உங்கள் தங்கையென இங்கு உமை உவமையாட....

செந்தாழம் பூக்களும்
செங்கனி சுவைகளும்
தன் மண தித்திப்பு தோற்கும்
தங்கள் குரலினிமை முன்

கானமயிலும் தோகை விரித்து சிலிர்தாடும்
உங்கள் மழைப் பாசம் கண்டு......

செல் எல்லாம் பிரியமாய்
அணுவெல்லாம் ஆனந்தமாய்...

கண்காணும் உருவங்களில்
எல்லாம் நிறை மட்டுமே கண்டு...உறவு தோழமை பிரியமாடி உயிரணைக்க
உங்களால் மட்டுமே முடியும் அக்கா.....

எல்லோரையும் நல்லவராய்
காணும் மகாபாரத மா தவ
மன்னவன் தர்மனின் ...
பெண்மை பிறவியாய்
மண் வந்த தாய்மை நீங்கள்...

ஓடோடி வந்தேன் அக்காவை பார்க்க.....

ஓடி வந்து ...கைபிடிக்கவில்லை

கழுத்தணைத்தார்...அந்த நொடி.அந்த ஈர அணைவில்
அன்னையடி நான் உனக்கு என்றே நெஞ்சம் நெகிழ்த்தினார்

பொன்மன மாமாவுடனும்
பொக்கிஷ குழந்தைகளுடனும்
வாழவேண்டும் அக்காஎன் ஆயுள் சேர்த்து நீங்கள்
ஆயிரம் பிறை காண்
அன்பு பெருவாழ்வு.....

ஆனந்த கண்ணீர் மலரை
அன்னை பாதமிட்டு சமர்ப்பித்து...

மனம் நிறைமணம் சூடி வாழ்த்துகிறேன்

வாழிய வாழிய வாழிய
பல்லாண்டு..பல்லாண்டு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..