Friday, 15 May 2015

திமிராய் மொழியாள்பவன்

தீ போல் ஒருவன்( தமிழ்க் கனல்)
தீயாகவே இவன்
திமிராய் மொழியாள்பவன்

பிறைசூடும் பித்தனவனின்
பிள்ளையவன்

சித்தன் இவன் தானோ என்றே பல நேரம்
சிந்தை குழப்புபவன்

பழக குழந்தையானவன்
பாச நட்பு தவிர எதும் எதிர்பாரதவன்

தோழமை கண்ணியம் நிறைந்தவன்
தோள்கொடுக்கும் நண்பர்களை உயிராய் கொண்டவன்

அன்பையும் பண்பையும் தவிர எவர் மீதும்
அனுமதியேறிக்கொள்ளாதவன்

அலைகடல் திமிரும் மொழிவளம் நிறைந்திருப்பினும்
எதுவும் எனதில்லை என்றே ..சிவன் பதம் கிடப்பவன்

உடுக்கை ஒலிக்க சலங்கைகட்டும் நமச்சிவாயம் முன்
பறையெடுத்து பண் இசைப்பவன்

சொல்லாய் மொழி வளைய....
இசையாய்..சிந்தை வளைய
யோக தவமாய்..தேகமும் வளைக்கும் ..வில்நாண் வித்தகன்

ஒப்பாரி பாட்டு இவன் படிக்க ..சவமும் எழுந்து சிவமாடும்
சூட்சமம்..அறிந்த பிறவியிவன்

எங்கள் அழகு ஏஞ்சலின் அன்புத் தகப்பன்..
ஆசை மனைவியின் பெருமை கணவன்.....

என்றும் எங்கள் நண்பன்...தமிழ் ....

எளிமையும் இயல்பும் இனிதே பண்பாடும்
என் நான்கு வருட .....நல்மன நட்பே

உம் பிறந்தநாளில் ..உமக்கோர் மொழி எழுதி வாழ்த்தி
உம் தோழமை நானென்று அகம் மகிழ்கிறேன் தோழா

சாதிக்க பிறந்த வேள்வி நீர் ..விண்ணுயர்ந்து வீறு நடை போட
எல்லாம் வல்ல ஈசன் உம்மை இமையணைக்கட்டும்

வாழிய வாழிய நீர் பல்லாண்டு பல்லாண்டு .

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..