பெண்மை மழை
வரவில்லை என
திட்டினாலும்
வந்ததும் வரவேற்று
ஆடி மகிழ்ந்தாலும்
விடாமல் கொட்ட...
போதும் நீ போ
வழியனுப்பினாலும்
பொங்கி கரைபுரள
சாபம் நீ என பழித்தாலும்
பெருமை சிறுமையாய்
எதையும் எதிர் அணைக்காமல்
பருவக் கிழத்தியாய்
பொழிந்துகொண்டே
தான் இருக்கும்
தாக தவிப்படக்கும்
தாய்மைநிறை
பெண்மை மழை...!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..