அன்னையின் பிரியமாய்
ஆயுள் தவ சொந்தமாய்
அல்லிப்பூ மணமாய்
ஆதவசுடர் வெளிச்சமாய்
இனிக்கும் சக்கரை வாழ்வின்
இணைசேர்ந்த உயிர்நாளாய்
இன்ப மணநாள் காணும்
நல் நட்பின் தோழமைக்கு Jagadish Kumar
இனிய வாழ்த்துக்கள்
சொந்தங்கள் சூழ சொல்வன்னோர் வாழ்த்த
பாச கிளைத்தலுடன் பவித்ர சொந்தமாடி
ஆண்டு பதினாலு கண்டு..அன்றில் பறவை நேசத்துடன்
ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என
வாழைகுருத்து வம்சம் கண்டு
வசந்தமாடும் வானவில் பிரிய ஜோடிகளே
ஜெக வெற்றியாடும் சவால்களுடன் அனைவரையும் அணைத்து ஆலம் விழுதாய் குடும்பவேர் தாங்கும்
எங்கள் தோழனை..
கனிவாடி கரம்பிடித்து கருத்திணைந்த குணமகளே
நித்திய நிம்மதி தங்கும் நிர்மல நேசமே
மணமாடி உயிராடி
மங்கல உயிர்பிரியமாடி
மகிழ்வு நேசகூடு கட்டி..இன்னிசை ஸ்வரலயமாய்
மதனோற்சவ வாழ்வு வாழும் தாங்கள்
இன்றுபோல் என்றும் இளமைஅன்பாடி
இன்பதிருவாழ்வு வாழ
நாம் வணங்கும் அன்னை வணங்கி
வான்நிறை நட்சத்திர பூக்களெடுத்து
மலர்கொத்து தொடுத்து கொடுத்து
வாழ்த்துக்கிறேன்.....
வாழ்க வாழ்க நீங்கள்.....
ஆயிரம் பிறைகண்ட ஆனந்தபெருவாழ்வு
இனிய வாழ்த்துக்கள் பாஸ்..
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..