Thursday 11 June 2015

விடமூறும்..ஆதிகாடு

ஆதி காட்டுக்குள்
ஆதாம் ஏவாளாய்

நானும் நீயும்....

ஆப்பிள்களும் பாம்புகளும்
இரைந்து உலவிக்கிடக்க

பொய்மை ஆடையில்லா
மெய்மையோடு..
துரோகம் தெரியாத நாமும்
ஓர் அங்கமென...

தேவன் வந்தானா
தீண்டாதே என்றானா...

தித்திக்க கனி கேட்டாயா
விஷமேறி விரல் சுரம் கண்டதா

அறியேனடி ...அன்பரசியே

பாவமென பழிசேர
தழைந்தெழுந்தது....
வாரிசென.....உணர்வு குலம்...

ஏழுவகை பிறவியெடுத்து
எத்தனை அறிவுஇயலாய்
தழைத்தாலும்....

ஆடையில்லா
ஆளுமை இரவு கண்டாலும்

மீண்டு படைக்கமுடியவில்லை அவனால்.....

நம்மின் .....விடமூறும்..ஆதிகாடு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..