Saturday 13 June 2015

வலிசுமந்த குழந்தை

பாரெங்கும் பரந்து விரிந்துள்ளது
வல்லரசு நாட்டின் வறுமை சாதனை
வலிசுமந்த குழந்தை தொழிலாளியாய்

வாய்விட்டு அழக் கூட திரணியற்று
சொட்டும் கண்ணீர் கல் சேமித்து
கனமாகும் பாறை மனது

படைத்தவன் குற்றமா
பிறந்தவன் குற்றமா
பார்க்க மறந்தவன் பழிபாவமா

ஏதென்று சொல்ல இயலாமலே
நிலமெங்கும் விதைந்து வருகிறது
நிமிர் மனித வர்க்கத்தின் ...சோக திமிர்

உருப்படியில்லா தகப்பன்
உருத்தெரியாமல் அழிந்துகொண்டிருக்கும் தாய்
வரிசையாய் வந்து பிறந்த தமைய உறவுகள்
வாழ வழியில்லா வலிவாழ்வு ...தான்
காராணி பிறப்பிடங்களா

குறுக்குவழி பணக்காரனும் ஓர்
பகுமான காரணி தானே இந்த
பழிபாவத்துக்கு

தீர்வென்ன தீர்ப்பென்ன..இந்நிலை மாற

வேகும் பிஞ்சுகளில் வெக்கை வாழ்வு வலி
நினைத்தாலே பதறுகிறது
கருவணைக்கும் தாய்மை

ராஜாகுட்டி ..செல்ல மகராணி எனும்
கொஞ்சல் எல்லாம் கோடை மழையாகி
வற்றி வெடித்து விடிகிறதே வாழ்வுநிலத்தில்

பிச்சையிட வேண்டாம் ...கல்வியிட வேண்டாம்
அரசு கவனிக்கும் என்று
கவனம் கடக்க வேண்டாம்

எங்கேனும் ஓர் குழந்தையை
தொழிலாளியாய் கண்டால்

நம் பிள்ளை நாத்தென ..
வேர்தழைக்க.......கைபிடித்து
அழைத்துச் செல்வோமே
நம்மாலான சமுதயா நீரூற்றி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..