Tuesday 16 June 2015

நிறைதிமிரே

புரட்சித்திமிர் பூமியெழுந்த
செங்குருதி நாள்

சுமக்கையில் அறிந்தாளா
இல்லை முதலாய் நீ குரலிட்டு
கை நிறைகையில்
உன் தாய்...உணர்ந்தாளா

தான் சுமந்தது..ஒர் வீர வித்தென்று

வலிகள் தாங்கி ஓர் சமுதாய
வலிநீக்க வந்த மருத்துவனே

அடிமட்ட மக்களை தன்னின் பிறப்பாய்
இமையணைத்த வேதனே

மரணத்திற்கு அஞ்சாத மாவீரனே
சே எனும் பெயரின் பொருள் விளக்கமாய்
சேயென அனைவரையும் அரவணைக்கும் நண்பன் நீ

சோசலிசத்தை உயிர் மூச்சாய் சுவாசித்து
சுடரெழுந்த சிம்மசொப்பனமே

பிடல் காஸ்டோரோவின் பிரியத் திமிரே

கவிஞனாய்..மருத்துவனாய்..அரசு அதிகாரியாய்
போராளியாய் எத்தனை அவதாரம் நீர் கொண்ட போது

புரட்சி எனும் உதிர அரிசியிலேயே
இன்றும் உன் பெயர் எழுதி விளைகிறது
எங்கள் போராளி இளைய நாத்துக்கள்

ஏவுகணைகளிலும் ராணுவத்திலும்
தன் திமிர் காட்டிய
வல்லரசுகளை ...கழுதைப் புலியாக்கி

மனிதசக்தியை ..மாபெரும் சக்தியாக்கிய மாவீரே

எழுந்து நின்று நிமிர் மார்காட்டி மரணம்
வரவேற்று மகிழ்ந்த எழுச்சி வேரே

இன்றும் அடக்குமுறை எழும் போதெல்லாம்
உலகு அச்சம் கொள்ளும் ..எங்கு நீ
பெயராய் பேரரறிவு உதிரமாய்
விழித்தெழுவாய் எரிமலையென என்றே

பூமியின் கடைசி ரோஷ மனிதன்
இருக்கும் வரை ....

நீயுமிருப்பாய் நிறைதிமிரே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..