Friday, 10 April 2015

தோழனாகிறாய்..மகனே

கழுத்து கட்டி
முந்தானை பிடித்தபடி
முதுகு மூட்டையேறி

தொட்டுக் கொண்டே
தூங்கி
இடித்து நடந்த நீ

மீசை அரும்ப
இடை இறங்கி

தோழனாகிறாய்..மகனே

பெருமித உச்சிமுகர்விலும்

பாரம் மனசழுத்த
மெல்ல வலிக்கிறதடா

உன்வளர்ச்சி தரும்
நம்
இடைவெளித் தனிமை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..