அறிவின் கலைமகளாய்
அழகின் திருமகளாய்
ஆற்றல் நிறை மலைமகளாய்
அவனிவந்த முப்பெரும் தேவி
ஒருங்கிணைந்த அவதார பிறப்பிற்கு
அன்புகொஞ்சும் தேவதை பிரியத்திற்கு
என் செல்ல லதா குட்டிக்கு Latha Swaathi
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எடுத்தசெயலில்....முடிக்கும் சிந்தையில்
கவனிக்கும் தெளிவில்...நேர்மையானவள்
அன்புகொஞ்சும் பிரியத்தில்
அணைத்து காக்கும் பாசத்தில்
நேசிக்கும் ஏகாந்தத்தில்.....தாய்மையானவள்
தோளணைக்கும் தீரத்தில்
மனோபல தைரியத்தில்
எவரையும் அஞ்சாமல் எதிர்க்கும் துணிச்சலில்
நான் விரும்பி நேசிக்கும் வீரமானவள்
நேர்மையானவள்..வீரமானவள்..தாய்மையானவள்
என் பாரதி கண்ட இத் திமிர்மகள்
பெண்மை நளின வெட்கங்கள் வேரூன்றி
அயல்நாட்டிலும் எம் தமிழச்சி அடையாளமாய் வாழ்பவள்
பார்க்க பார்க்க பவிதரம் கொஞ்சும் அழகியானவள்
என்னின் உயிர் நேசிப்பு தோழமையானவள்
எல்லோரிடமும் சகோதரதுவம் கொஞ்சும் பிரியமானவள்
அன்னையின் அருள்துளி என்னில் என்றால்
இவளை நான் கண்டு கைகோர்த்து இமையணைத்தது தான்
தோழி என தோள்சாய்த்தலில் உருகி உதிரும்
இவளில் என் கவலைகள்...
மருத்துவரான எனக்கே மனவளகலை கற்றுத்தரும்
இவள் தம் அன்புநம்பிக்கைகள்
எழுத எழுத மொழி நெகிழ்கிறதடி உனை அணைக்கும்
என் பாசநேசிப்புகள்
அன்னைக்கு ஆனந்தகோடி நன்றிகள்..உன்னை என் கண்ணில் காட்டியமைக்கு
வாழவேண்டுமடி என் வாச பூமகளே
மண்ணில் நானிருக்கும் காலமும் என் ஆயுளும் சேர்த்து நீ என்றும் என்றென்றும் இன்பச் சாரலாய் ...
நிம்மதி மகிழ்வு பூச் சூடி
வாழ்த்துகிறேன் உயிர் நிறைபூக்களை அட்சதை தூவி
வாழ்க வாழ்க வாழிய நீ பல்லாண்டு தோழி...
இப்படி ஒரு அருமையான தோழி உங்களுக்கு கிடைத்திருப்பது உங்கள் அதிர்ஷ்டமே... உங்களின் அதிர்ஷடத்திற்கு சொந்தகாரியான அவர்களை நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு பல்லாணடு
ReplyDeleteஅன்னையின் அருள்துளி என்னில் என்றால்
ReplyDeleteஇவளை நான் கண்டு கைகோர்த்து இமையணைத்தது தான்
தோழி என தோள்சாய்த்தலில் உருகி உதிரும்
இவளில் என் கவலைகள்...- உண்மையான நட்புக் கிடைத்தால் அதைவிடப் பெரிய சொத்து வேறென்ன இருக்கிறது. உங்கள் நட்புப்போலவே அந்தச் சகோதரியும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.