திரிசடையாய்...
கொண்டை கங்கையாய்.
பிறைநிலவாய்
பட்டை பூதியாய்
நடுநெற்றி கண்ணாய்
கழுத்திடை பாம்பாய்
விழிக் கனலேந்தி
ருத்ராட்ச மணி
மாணிக்கனாய்
சிந்தையெழுந்த சிவம்
மணமாய் மனம் நிறைய
கட்டிய சலங்கை
உடுக்கையொலியில் கதற
பழிபாவ பதர் ஆத்மா
படுத்துறங்கும்
இடுகாட்டு சுடுமணலில்
தவ மேடையமர்ந்து
அகில உலகமாளுகிறாயடா
அடிமுடி காணாத
எங்கள்
சவகாட்டு
தத்துவ பித்தனே...!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..