காலப் பெண்மை அடையாளமே
கடைசிவரை வருவேன்
என கை பிடித்தவர்
காலனோடு போக
ஒருகையில் மகளோடு
மறுகையில் கனிவெடுத்து
கல்வியோடு ஒழுக்கம்
சொல்லித் தந்து
இளமை தீயை.....
தனிமையாய்..வென்று
அறிவு விழுதுகளாய்
குழந்தைவேர் பரப்பிய
பள்ளிகூட பத்மா டீச்சர்
கன்னிமேரியான
காலப் பெண்மை அடையாளமே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..