Monday, 13 April 2015

தேவ பிரியமே தெய்வ வளமையே


தேவ பிரியமே தெய்வ வளமையே

காக்கும் நாநிலமே
கருணையான தத்துவமே

நிம்மதி சொரூபமே
நினைவாளும் சத்தியமே

தவிக்கும் கைகளில் தாய்மையென நிறையும்
பிள்ளை கீதமே

தேடல் எது தேவை எது
என்றுணர்ந்து .....
தவமளிக்கும் வரமே

ஏங்கும் கரங்களில்
பிள்ளையென உறைந்து

உயிர்பிறவி மீட்சி கொடு
உற்சவமே

சரணம் சரணம் பூரண சரணம் பரமமே...

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..