Tuesday, 28 April 2015

ஆணிவேர் இயற்கை

அன்பணைத்த மனைவி
ஆசை தொட்ட கணவன்
விரல் பிடித்த பிள்ளை

ஒட்டு மொத்த குடும்பமாய்
எவருமில்லை

வாய்விட்டு அழக் கூட திரணியற்று
உதிரியாய் கிடக்கிறது உறவுகள்

கட்டி கட்டியாய் சேர்த்த தங்கம்
கட்டுப் பணம்.........கட்டிக்காத்த வீடு
வாங்கி குமித்த வசதி பொருட்கள்
வான் உயர்ந்த கலையழகு

எல்லாம் நொடி குழைந்து
புழுதி சூழ கீழ் விழுந்தது
சில ஹெக்டர் நில நடுக்கத்தில்

உயிரா..பிணமா..என்றே
உள்புதைந்து கிடக்கிறது
தோண்ட தோண்ட சாம்பல் மண்ணில்

சிலதுளி கண்ணீரும்
பெரும் வருத்த மவுன அழுத்தமும்
மாற்றி தரப் போவதில்லை
இழப்பீடு உயிர்களை

எல்லாம் போலி என்றே நாம் உணரும் நிமிடம்
நம்மவர்களை ..இழக்கும் நாள்

பணசெல்வாக்கில்..பதவிஅலட்டல்களில்
அறிவியல் ஆழ்வளர்ச்சிகளில்
விண் தொட்ட சாதனைகளில்

நின்று வாழ்வதாய்...மார்தட்டும் மனிதனே

உன்னை என்றும்
வென்றே வாழ்ந்துகொண்டிருக்கிறது

இங்கு...ஆணிவேர் இயற்கை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..