Monday, 13 April 2015

சகலமுமாகும் சதி

பெண் பார்த்த போது
பேரம் பேசி

கட்டியணைத்து
உணர்வுகள் நசுக்கி

எதிர்த்து பேசினால்
எட்டி மிதித்து

நடமாடும் வரை
நாசப்படுத்திய
கணவன்

நோயில் படுக்க
பதறி அழுது
விரதமிருந்து
வினை மீட்கிறாள்

தாயாகி தாதியாகி
தெய்வமும் மிஞ்சி

சகலமுமாகும் சதி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..