Wednesday, 15 April 2015

ஆளுமை வேதமே

ஆளுமை வேதமே
அன்பெனும் நாதமே

வாழ்ந்த தத்துவமே
வாழவைக்கும் அற்புதமே

அவனி காக்கும் அருமருந்தே
அன்னையெனும் சுவை விருந்தே

ஆன்மீக பாதைகாட்டியே
நேர்மையின் வழிகாட்டியே

எச்சூழலிலும் ஒளியென வந்து
பாதை நிறையும்

தெய்வீக விழி ஒளி சுடரே

எல்லோரும் நலமுற்றிருக்க
என்றும் நின் பாதமலர் பணிகின்றோம் தாய்மையே

வருட மாதங்களாய் வாழ்வணைப்பாய் நீயே...!!!!!!!!!

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்ய மயி பரமே..!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..