Friday, 24 April 2015

வாழ்த்துகள் தோழி


ஆனந்த பூங்காட்டின்
தென்றல் இளவரசிக்கு Chelli Sreenivasan

அழகின் அருமை முகவரிக்கு

சிரிக்காதவரையும் சிரிக்க வைக்கும்
கலைவாண வித்தகிக்கு

பார்க்க குமரியாய்..பழக குழந்தையாய்
செழுமை கொஞ்சும் குணவழகிக்கு

இயல்பு வாழ்க்கையை..இனிமை நாட்களாய்
நகர்த்தும் சந்தோஷ கடத்திக்கு

எல்லோரிடமும் இன்முகமாய் தோழமையாடும்
நட்பின் நுழைவாயிலுக்கு

சின்னு சிக்கு வின் அம்மாவுக்கு
ஸ்ரீநிவாசனின் முதல் குழந்தைக்கு...

எந்த உடையிலும்
எழில் வதனம் கொஞ்சும் அழகின் நேர்த்திக்கு

சந்தோஷ பிறந்தநாளாம்...பூமகள் பூமி வந்த திருநாளாம்
வாருங்கள் வான் நிறைதேவதைகளே
வண்ண மலர் பூத்தூவி வாழ்த்துவோம்

கோடைமழையாய் வான் இறங்கி கூதல் குளிர்தல் தரும்
வசந்த பொன்மகளை.....

என்றும் நீ இடும் பதிவாய்..நிம்மதி ஆனந்த மகிழ்வு சூடி
மங்கல பிரியசொந்தங்கள் சூழ ....

வாழியடி தோழி நீ.....ஆயிரம் பிறைகண்ட அற்புத பெருவாழ்வு

வாழ்க வாழ்க ...வாழிய என் பிரிய மொழிமகளே...heart emoticon
 — with இரா. குமார்Meera Blossom and Chelli Sreenivasa

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..