Wednesday, 15 April 2015

மன்மத தமிழ் மகள்*


******************மன்மத தமிழ் மகள்******************

செஞ்சுடரோன் விடியலேந்த
செங்கனிகள் கிளைதாங்கி
செழுமைதளிர் மரம் நிறைய

செம்பூ பிரியமேந்தி
மாததிங்கள் பன்னிரண்டு கூந்தல் பின்னி
மதுர சிணுங்கலோடு
மந்தகாசம் பொங்கி
சித்திரை முதலாய்
சிவந்த பொன் அனலேந்தி

செவ்வாய் திருநாள் உற்சவத்தில்
கிருஷ்ணபட்ச தசமி திதியில்
நட்சத்திரம் அவிட்டமாகி
லக்னம் கடகமாகி
நவாம்ச கன்னியில்
சுபயோக பத்தரை நாம கரணத்தில்
பசும் பொன் தங்கத் தமிழாய்
சித்தயோகத்தில்
அந்தர சுக்ரன் ..அகங்காரன் ஓங்கரையில்

மயில் ஊண்கொள்ளும் பஞ்சபட்சி நான்காம் சாமத்தில்

சிங்கார அடியெடுத்து வைக்கிறாள்
எங்கள் அடிமுடிகாண தொன்மைபிரிய

மன்மத தமிழ் மகள்

என்றும் இளமை கொஞ்சும்
எங்கள் செந்தமிழ் கன்னி மகளாய்

வாழும் அவனி உயிர்கள்...அவளோடு அடியெடுத்து
வசந்த பூஞ்சோலை நுழைந்து

வாழ்வணைக்கும் புகழ் வெற்றி நிம்மதி செல்வங்கள்
நிறைகுடமென தளும்பி ....

மன்மத சொர்க்க வாழ்வு வாழ....
மாதம் பொய்க்கும் மழை ....தவறாது பெய்து நிலம் காக்க
பொறாமை போட்டி துவம்ச அரக்க குணங்கள்
பூமிவாழ் உயிர் விட்டு விலக

எல்லாம் வல்ல அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்

மங்கல மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமைகளே...!!!!!!1

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..