Friday, 10 April 2015

வாழிய நீ பல்லாண்டு

அன்பின் பிரியமாய்
அதிர்ஷ்டத்தின் முகவரியாய்

அக்காவின் மகளாய் Indhumathy
ஆருயிர் தோழியாய்
செல்லச் சிணுங்கலோடு
மலர் பூக்கும் விடியலில்

மணிப் பூஞ்சிறகு விரித்து
மடி வந்த தேவதையே

என் பின் குழந்தைமுகம் காணா வீட்டில்
சிறுபொன்மணித்தேராய்
நீ நான் விரலிணைத்து உலாவந்த
தெய்வப் ப்ரியங்கள்....என்றும்
மனதினிக்கும் தேன் நினைவுகள்

அறிவின் சொரூபமாய்
அழகின் சிற்பமாய்
அமைதியின் பிறப்பிடமாய்
பிடிவாத பேரின்பமாய்
பிள்ளைமனக் கனிவுகளுடன்
அறிந்தும் அறியாக் குறும்புகள்
இன்னும் நிறைந்த இனிமையே

பழகும் மனங்கள் அனைத்திலும்
பாசஈரமுடன் ஒட்டிக்கொள்ளும்
நதிநீரலையே

தெளிவான சிந்தனையுடன்
அசாத்திய துணிச்சலுடன்
எங்கும் எதிலும் வெற்றி காணும் திருமகளே
எங்கள் குலமகளே

ஆனந்தபிரியங்கள் அணைத்த நீ...
என்றும் என்றென்றும் மங்கலப் பூச்சூடி
மணநாள் கண்டு மதுப்பூ இன்பமேந்தி உயிரிணைந்த
உறவான ...உன் இணையான

என் தம்பியுடன்.... Chilamparasan Chinnapandi
செல்வ வரவாய்
செழுமைவாழ்வு தவமாய்
உன் திருவயிறுதித்த
எங்க தங்கமயில் ஹன்சிதாவுடனும்

ஆண்டுகள் பல...ஆளுமை நேசமுடன்
வசந்த பெருவாழ்வு வாழ

மங்கலப் பூக்கள் தூவி....
மகிழ்வு அட்சதை தூவுகிறேனடி
மகளே..........
வாழிய வாழிய..வாழிய நீ பல்லாண்டு

இனிய வாழ்த்துக்கள் இந்துமா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..