Friday, 4 September 2015

உயிர் தவமெல்லாம்

கத்தி கொண்டே
கதவு தட்டி பசியாறும்
அது

கனத்த மவுனம் சுமந்து
இருநாட்கள்

அழைத்தாலும்
அசையாமல் கூட்டிலிந்தே
விழி உருட்டி.....

உயிர் தவமெல்லாம்
உடம்பு சூடாய்
அனல் வடிய

அடுத்த நொடியில்
அழுகுரலாய்
ஐந்தாறு
கரைதல்கள்

பரவசமாய்
பால்சோறு
குழைத்து ஓடி வர

எப்போதும் போலான
பார்வையில்
எதோ ஓரு ஈர்ப்பு செய்தி
கருகரு காகையின்
கடைக்கண் கண்ணீரோடு

அடைகாத்தல்
அவனி வாழ் உயிரில்

மரணித்து
மறுசுழற்சி தரும்

பேறுகால பேரின்ப
பெரும் வலியே !

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..