Friday, 4 September 2015

பருவம் சமைஞ்சி

பருவம் சமைஞ்சி
குச்சு ஒதுங்கி
பல்லாங்குழி ஆடி

பரிசம்போட
அய்த்தைமகனும்
மாமன் மகனும்
போட்டிபோட
வெட்கப் பெருமிதமா

ஆசை பட்டவனுக்கு
கழுத்த நீட்டி

அடிச்சாலும் பிடிச்சாலும்
சுத்தி நாலு சனத்தோட
ஆயுசு ருசிக்கும்

கன்னியாத்தாளுக்கு

அதிசயமாத்தான் இருக்கு
அதிகம் படிச்ச மக

சொந்தத்தல கல்யாணம்
செய்யக் கூடாதும்மா நு
சொல்லுறது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..