Tuesday, 29 September 2015

அப்பாவின் அந்தரங்கம்


ஆயிற்று
அன்றோடு
அப்பாவை அனுப்பி
பதினாறுநாள்

பரணிலிருந்து அவரின்
டிரங்கு பெட்டி இறக்கி

உடனே திறக்க சொல்லி
மனைவி

அழுகையோடு அம்மா
சம்மதிக்க
சுத்தியல் எடுத்து வருகிறான்
மகன்

ஓங்கி தட்ட போய்
ஒருமனதாய் வேண்டாம் என
மீண்டும் பரணிலிடுகிறேன்

குரோதப் பார்வையுடன்
குடும்பம் விலக

உள்ளிருந்து
வணங்குகிறது

அன்றொருநாள்
கதவிடுக்கில் நான்
பார்ப்பது அறியாது

கண்ணீர் வழிய

பழுப்பேறிய தாள்களில்
பத்திரப்படுத்திய

அப்பாவின் அந்தரங்கம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..