Monday, 2 March 2015

நேர்மைஉதிரக்குழி


இலையில்லா
உன் கிளை
இளமை ஒளித்த
மொட்டு
இதழ் விரித்த பூ
கனிவாடும் காம்பு

எடுத்த செயல் முடிக்க
நிலையாய் நின்று எழிலாடும்

அமைதியான
உன்னில்

இவையெல்லாம்
எத்தனை அறிவழகு

இயல்பாயிரு என்று
சொல்கிறேன்

திருவிழா பின் சென்று
தீட்டியவர்ணம் அப்பி
வளமை காட்டுகிறாய்

உன்னை
பிள்ளை என்பதா
பிணக்கு என்பதா

நேர்மைஉதிரக்குழி
துடிக்கும்
என்னில் எப்போதும்
தூரத்து பச்சையாயிரு

கண் குளுமையாகாவிடினும்
இமை எரிச்சலாயில்லாமல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..