Thursday, 26 March 2015

என் கவிதையன்னையே..!!!!

கொஞ்சி சிணுங்கி
அதட்டி மிரட்டி
அழுது சிரித்து
வாசித்து சுவாசித்து

பிள்ளையென உன்னை பிரசவித்து
பிள்ளையாய் உன்னில் கர்ப்பம் கண்டு

உன் மடியிலேயே
கைகால் முடக்கி
கனவுதுயில் காண்கிறதம்மா

என்..வரமேந்திய
இப்பூமி பிறவி

என் கவிதையன்னையே..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..