நான் எப்போதும்
உன் தோள் வளைவு சாய்ந்தே
பேசிக் கொண்டிருக்கிறேன்
உனக்குத் தெரியுமா....தெரியாது
உன் பிரிவில் நான்
அழுது துடித்திருக்கிறேன்
உனக்குத் தெரியுமா...தெரியாது
உன்னுடன் நிறைய
செல்லச் சண்டையிட்டுருக்கிறேன்
உனக்குத் தெரியுமா...உன்னை??
தெரியாது
ஆனால்
எனக்குத் தெரியும்
உன் தேவை எதுவென்று..????
ம்ம்ஹூம்ம்...
உன்னைப் பார்த்த பின் தான்
முதலாய்
சிணுங்கி தெரிந்துகொண்டேன்
எத்தனை தைரியசாலியையும்
நேசம்
ஊமைக் கோழையாக்குமென்று
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..