Monday, 2 March 2015

புஷ்பாஞ்சலி


மகிழ்வான நிமிடங்கள் தரும் மலர்களின் தேவிக்கு
மருக்கொழுந்து சமர்ப்பணம்

விழி வழியும் நீர் துடைக்கும் தூய்மையின் பிரியத்திற்கு
விருட்சிப் பூக்கள் சமர்ப்பணம்

செல்லாத வழி சென்று வலியேந்தி தன் தவறு உணரும் பிள்ளைகளை தாவியணைத்து தன் வழி திருப்பி இமை வருடி இணைபாதுகாப்பாய் மன்னிக்கும் மகத்துவத்திற்கு

நானிருக்க ..நான் அணைக்க ..என்ன துயர் உனக்கு எனும்
மாசில்லா பிரிய தேவமயிக்கு...அவனி பூத்த அனைத்து மலர்களும் மலரடிகளில் காணிக்கை....

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி சரணம்...!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..