எங்கிருந்தோ வந்து
எடுத்தவுடன் சண்டையிட்டு
முறைப்பாய் முகம் திருப்பி
அருகமரவைத்த
ஆசிரியையை திட்டி
முட்டி உரச..
வேகமாய் விலகி போனவள்
உடன் படிக்கும் கோபி முடியிழுக்க
அதட்டி அவனை விரட்டி
அழுத என் விழிதுடைத்த
நிமிடத்திலிருந்து
இன்றும்
இமைக்குள் இருக்கிறாள்
பால்ய நேசக் கூட்டின்
முதல் சிநேகிதி
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..