Thursday, 11 June 2015

என் பெண்மை நதி

மயங்கும் போது மடி அணை
மருளும் போது மார்பணை

துவளும் போது தோள் அணை
துயிலும் போது முதுகணை

துடிக்கும் போது
வேரோடு எடுத்து வேகமாய் இறுக்கி அணை

பூமிச் சொர்க்கம் காணட்டும்..தலைவா

உன்னில் கரை கட்டி...புரளும்
என் பெண்மை நதி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..