உயிர் சிநேகிதங்கள்
பார்த்தவுடன்
நெருங்கி கட்டி
தொட்டு தோள்தொங்கி
அழுகையோ... சிரிப்போ
உதட்டோடு நிறுத்தி
ஒத்தட வார்த்தைகளால்
ஒவியப் பிரியமாடி
மனம் நடு கோடிட்டு
எல்லைதாண்டாமல்
நல்லது கெட்டது சொல்லி
அவர்தம் நலம் நாடாது
தன் சுதந்திர வட்டமும்
நெருங்கவிடாத
சுயநலமிகளே
இங்கு
உயிர் சிநேகிதங்கள்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..