Sunday, 21 June 2015

புஷ்பாஞ்சலி


பக்தி பரவசமளிக்க பவித்திர துளசி

இடர்நீக்கி இன்பம்தர இளஞ்சிவப்பு ரோஜா

செல்வவளம்நிறைய நாகலிங்க மலர்கள்

ஆழ்மனவிரிதலுக்கு ஆதூர தாமரை

வாடாத வாழ்வுக்கு வாடாமல்லி

மணம் சூழ் மனதிற்க்கு கனகாம்பரம்

முன்னேற்றமளிக்க மஞ்சள்செவ்வந்தி

முக்தி தர வெள்ளை செவ்வந்தி

பாசம்சூழ் கனிவிற்கு பலவண்ண பட்டன் ரோஜாக்கள்

செயலாற்றும் சக்திக்கு செவ்வரளி

மகிழ்வுநிறை மனமேந்தி மரகதப்பூ அலங்காரம் செய்து

அன்னை உன் அன்புத்திருவடிகளில் ஆனந்தநன்றியாய் சமர்ப்பித்து அருள்வேண்டுகிறோம் தாய்மையே

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி சரணம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..