Sunday, 21 June 2015

மண்நிறைய விதையிட்டு

மண்நிறைய விதையிட்டு
களம்நிறை அறுவடை குமித்து

கைநிறை அள்ளி
மரக்காநிறை போட்டு
மச்சுநிறைய மூட்டை குமித்த

விவசாயக் கதையை
பேரன் தூங்க..பெருமைதட்டி சொல்லி

வலிக்கும்
தன்நெஞ்சு நீவிக் கொள்கிறார்

வானம் பொய்த்த புழைப்பில்
மானம் காக்க

கட்டிடகாரனிடம் கழனிவித்த
கந்தய்யா அப்புச்சி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..