ஆனந்த அன்பின் ஆகாசபிரியங்களை
நட்பெனும் கண்ணியமேந்தி
நண்பனெனும் சிறகுவிரித்த
என் முதல் தோழனுக்கு.... Datchana Mourty
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திக்குதெரியா முகநூல்வனத்தில் ...
சிறுகூட்டுப்புழுவாய் சிறகு முடக்கி
சாளரம்திறந்த எனக்கு..முதல் அறிமுகமாய்
முத்தான நண்பனாய்....
கலையுறங்கிய கவிஆர்வத்
தூண்டுகோலாய்....
தமிழினிமை பிரியங்கள் கோர்த்து
தனிஒருபாதையாய்
புகைப்பட வழியிட்டு..புடம் போட்ட நட்பு நீர்
முகம் பார்த்ததில்லை..முகவரிகேட்டதில்லை
குரல் கேட்டதில்லை அதிகம் அளவாடியதில்லை
இருப்பினும் இருவரிலும் எள்ளளவு மரியாதை குறைவில்லை
உம்மின் தமிழ்கூட்டுப் ப்ரியதோழமைகளில்
நானும் ஓர் மொழியெடுத்து எழுததுவங்கினேன்
ஆயிற்று ஆண்டுகள் ஐந்து ...கடந்தவந்தபாதை
எழுதியனவும் எண்ணிக்கை 5000 மிக
முகமறியா என்னை முன்நிறுத்திய தமிழால்
நட்புவட்டமும் தேடாமல் ஓடிவந்தணைத்தது
ஐந்துஆயிரம் மின்னும் மிகுதியாய்
எழுதவில்லை என்றால் என்னை இங்கு யாருக்கு தெரியும்
அந்த எழுத்தின் பாதையில் ஏணியமைத்த உம்மை
என்றும் மறவாது என் நட்பினிமை பிரியங்கள்
உம் கூட்டில் எனக்கு கிடைத்த உதிரசொந்தமே
அன்னையென என்னை கொண்டாடி
தாய்வீடு தந்த...என் அன்புத்தம்பி Sedhu Raj
அழகிய அன்புததங்ககூட்டில் அற்புததோழமையாய்
என் நண்பெனும் மனிதராய் இணைந்து கைகுலுக்கிய
இனிய தோழமையே
சங்கத்தமிழாய் சந்தனவாசனை மணமாய்
சரக்கொன்றைமலர்ப் புகழாய்..
சந்தோஷ வெற்றிகள் குவிந்து வழிந்து
சரயூ நதியாய் நீர்.... நலம்பலபெற்று
சாதனைச்சிகரமேறி அவனிபோற்ற அரும்பெரும்வாழ்வு வாழ..அன்னைத்தமிழையும்..என்அன்னையையும்
வணங்கி வேண்டி வாழ்த்துகிறேன்
வாழிய வாழிய நீர் வாழையடி வாழ்வு பல்லாண்டு
இனிய வாழ்த்துக்கள் மூர்த்தி
நட்பெனும் கண்ணியமேந்தி
நண்பனெனும் சிறகுவிரித்த
என் முதல் தோழனுக்கு.... Datchana Mourty
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திக்குதெரியா முகநூல்வனத்தில் ...
சிறுகூட்டுப்புழுவாய் சிறகு முடக்கி
சாளரம்திறந்த எனக்கு..முதல் அறிமுகமாய்
முத்தான நண்பனாய்....
கலையுறங்கிய கவிஆர்வத்
தூண்டுகோலாய்....
தமிழினிமை பிரியங்கள் கோர்த்து
தனிஒருபாதையாய்
புகைப்பட வழியிட்டு..புடம் போட்ட நட்பு நீர்
முகம் பார்த்ததில்லை..முகவரிகேட்டதில்லை
குரல் கேட்டதில்லை அதிகம் அளவாடியதில்லை
இருப்பினும் இருவரிலும் எள்ளளவு மரியாதை குறைவில்லை
உம்மின் தமிழ்கூட்டுப் ப்ரியதோழமைகளில்
நானும் ஓர் மொழியெடுத்து எழுததுவங்கினேன்
ஆயிற்று ஆண்டுகள் ஐந்து ...கடந்தவந்தபாதை
எழுதியனவும் எண்ணிக்கை 5000 மிக
முகமறியா என்னை முன்நிறுத்திய தமிழால்
நட்புவட்டமும் தேடாமல் ஓடிவந்தணைத்தது
ஐந்துஆயிரம் மின்னும் மிகுதியாய்
எழுதவில்லை என்றால் என்னை இங்கு யாருக்கு தெரியும்
அந்த எழுத்தின் பாதையில் ஏணியமைத்த உம்மை
என்றும் மறவாது என் நட்பினிமை பிரியங்கள்
உம் கூட்டில் எனக்கு கிடைத்த உதிரசொந்தமே
அன்னையென என்னை கொண்டாடி
தாய்வீடு தந்த...என் அன்புத்தம்பி Sedhu Raj
அழகிய அன்புததங்ககூட்டில் அற்புததோழமையாய்
என் நண்பெனும் மனிதராய் இணைந்து கைகுலுக்கிய
இனிய தோழமையே
சங்கத்தமிழாய் சந்தனவாசனை மணமாய்
சரக்கொன்றைமலர்ப் புகழாய்..
சந்தோஷ வெற்றிகள் குவிந்து வழிந்து
சரயூ நதியாய் நீர்.... நலம்பலபெற்று
சாதனைச்சிகரமேறி அவனிபோற்ற அரும்பெரும்வாழ்வு வாழ..அன்னைத்தமிழையும்..என்அன்னையையும்
வணங்கி வேண்டி வாழ்த்துகிறேன்
வாழிய வாழிய நீர் வாழையடி வாழ்வு பல்லாண்டு
இனிய வாழ்த்துக்கள் மூர்த்தி
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..