Friday, 19 June 2015

புனித ரமலான் முதல் நாள்

அருள்நிறை மாதத்தின் அகர நாள்

புனித ரமலான் முதல் நாள்

நன்மைநிறை மாதமாய் பிறவியெடுத்து
நல்லோர்நிறை நோன்பாய்
ஐ கடமை மூன்றாம் கடமையாய்
அன்னம் தண்ணி ஒதுக்கி
ஆழ் ஒளிதிசை சிந்தை பயணித்து

அல்லாவிற்கு ஆகாத காரியம் தவிர்த்து
இச்சைகள் விலக்கி,,,
இறையை உயிரென நாடி....

புனித குர் ஆன் புவியிறங்க
து ஆ எனும் நோன்பு தவங்கள்
அங்கீகரிக்க ..........

உயிரோடு மெய்வருத்தி
உயிர்மெய் தேடி

தீமையெனும்
தீய எண்ண பழக்கங்கள் விலக்கி

உமை நாடி ..நாளொன்றின்
ஐ நேர தொழுகையை.. உயிராடும்
எம் இசுலாமிய சகோதர உதிரங்களை

அவர்தம்
மனக்கட்டுபாட்டு உறுதியாய்
உடனிருந்து சக்தி தந்து

உயிரணைப்பாய்,,,,,,,,,எல்லாம் வல்ல இறையே

இன்ஷா அல்லாஹ்ஹ்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..