Sunday, 21 June 2015

கலையும் சிநேகித தேன்கூடு

உன்னைப் போல்
புரிந்தவர் யாருமில்லை

என்னைப் போல்
உணர்ந்தவரும் எவருமில்லை

மழைவான் தோன்றும்
ஒற்றைநட்சத்திரமாய்
உன் பசிக்கு நான் பதறியதில்
உரு தோன்றியது
நமக்குத்தெரியாமலே
நம்மின் தொப்புள்கொடி

சிரிப்புதந்த உரிமை
சிறுசோகம் பரிமாறி
அன்பு சுமை...இமையேற

யாரோ கல்லெறிய
நீயே காரணமாக
சிதைந்துவழிந்து
சின்னாபின்னமாகிறது....
சிநேகித தேன்கூடு

வேடிக்கை உண்டவர் எல்லாம்
ஆயுள்வரம் பெற

தன் மானமாய் தலைசுற்றி
சுருக்கிட்டு கொள்கிறது
உயிர்க்கொடி..

மாயன வாசலில்
சிதறிக் கிடக்கிறது

பலர் கால் மிதிபட
மானப் பூக்கள்

பிரியமாடிய மனசுக்கு
மரணத்திலும்
பிரிவில்லையென்றபோதும்

கனிந்த பின்னே
காயம் தந்து
வெம்பி காயாகிறாய்,,... நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..