Monday, 2 March 2015

அக்கா குழந்தை


இழுத்து கொஞ்ச
எடுத்து தூக்க

அணைத்து மடியமர்த்த
தெரியாமல்

அசைவில் நடுங்கி
அழுதால் பயந்த போதும்

யாரிடமும்
கொடுக்காது

கைகால்முளைத்த
பொம்மையாய்

வந்த தம்பியை
வந்தவர் எல்லாம்
எடுத்து போய்விடுவரோ

அச்சமுறும்
அக்கா குழந்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..