Thursday 9 July 2015

இணை நேச அடையாள ஆவியாய்

இணை பிடித்து
நடந்தாலும்
ஈரெட்டு பின்னே வருவா

ஆயிரம் வசவிலும்
அழகாய் அன்பு
ஒளிச்சு வைப்பா

திட்டி ஓய்ந்தாலும்
தின்ன வட்டி கழுவ விடமாட்டா

உறங்கிய பின் உறங்கி
விழிக்கும் முன் எழுவா

அதிக பச்ச அழைப்பே
இந்தாருமய்யா என்பது தான்

பொத்தி பொத்தி
தாத்தன பாதுகாத்த
பேச்சி அப்பத்தா
அடைமழை பொழுது ல
பொசுக்குன்னு ஒரு நா
போயிட்டா

கத்தல கதறல

இத்துபோன உடம்புல
ஈரம் தாங்காம
கிழவி போயிட்டா நு
செவனேனு செவரு சாஞ்சவரு தான்
செங்கப்பன்

எடுத்து இழுத்துவிட்ட மூச்சு
திரும்பாலே போயிடுச்சு
கிழவியோடவே

சரிஜோடி..சமதையா
இறந்த த ..ஊரு பேச

நெஞ்சுகுழி நேசத்தோடு
இன்னும் வீதி வழி
நடந்துகிட்டே தான்
இருக்காவுங்க

இருவரும்
இணை நேச
அடையாள ஆவியாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..