Thursday, 30 July 2015

திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி...(தி.மு.க)


திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி...(தி.மு.க)

தங்கத்தமிழ் எடுத்து தன்னைச் செதுக்கிய
முத்துவேலர் தமிழுக்கு..இன்று அகவை 91

அஞ்சுகத்தமிழ் பெற்ற.....அரும் பெரும்
செம்மொழிக்கு..இன்று அகவை 91

தூக்குமேடை நாடகத்தமிழ் மூலம்
கலைஞர் பட்டம் பெற்ற..கலைமகனுக்கு..அகவை 91

கண்ணம்மா தொட்டு...மந்திரிகுமாரி பிடித்து
பூம்புகார் வழியில்,,இளைஞராய் வெற்றிநடைபோடும்

கதைவசனத் தமிழுக்கு..இன்று அகவை 91

சங்கத்தமிழ் எழுதிய தெண்பாண்டி சிங்கத்திற்கு
உரைதொட்டு..குறளோவியம் எழுதிய பொன்னர் சங்கர்க்கு
இன்று அகவை 91

ஐந்துமுறை முதலமைச்சராய்..பன்னிருமுறை
சட்டமன்ற உறுப்பினராய் இருந்த கழகத் தமிழுக்கு.....
இன்று அகவை 91

வளரிலம் பருவத்தில் கவிதை கதை என வாகை சூடி

தாய்மொழி தெலுகு எனும் போது
தமிழ் மொழி பிறந்து...தமிழ்தேனை..தாய்பாலென
அள்ளிப் பருகி ருசித்த முதும்பெரும் தலைவனே

எம் ஏ பி எப் (March Attempt But Fail)..(MABF)படித்த,.,,பெரும் தமிழ்செல்வனே

நீதிக்கட்சி எழுப்பியதோ,,நின் சீர் நடை அரசியல் பயணத்தை
தமிழ் எனும் வேல் உனக்கு உதவியதோ..இடைவரும்
இடர்வரும் களைகளை களைய......

எழுத்தில் எழுந்தாடும் புரட்சியை
பேச்சில் குதித்தாடும் உன்வீச்சு வேகத்தை கண்டு
ஆளுமை செய்ய வந்த ...அந்நிய மொழியாம்
இந்தியும் சென்று பதுங்கியதோ...அடுக்களையில்

தமிழ் என் மானம் என்று தாய்மானம் காத்த தமிழனே

தமிழெனும் மொழி வளைத்து
கவிநடையில்..சொல்லோவியத்தில்..இரட்டைகிளவி தெறிக்க நீ இன்றும் களமாடும்..மொழிநடையில்

உமக்கு
முன்னும் ஒருவரும் பிறந்ததில்லை
இன்னும் ஒருவரும் பிறந்ததில்லை
பின்னும் ஒருவரும் பிறக்கப் போவதுமில்லை...தலைவா

வாழும் தமிழனுக்கும்.....வரப்போகும் தமிழனுக்கும்
நீயே வள்ளுவன்....

உன் அகராதி புரட்டாது...எங்கும் புள்ளி வைக்காது
இன்றைய புதுதமிழ் மழை

அண்ணா எனும் உம் அருமை தலைவனுக்கு
நீ வடித்த..நெஞ்சுருகும் கவிதாஞ்சலியில்

நீர் வாசித்த குரலாஞ்சலியில்...
ஒலிப்பெருக்கியின் மூலம் கேட்டு

கலங்காத வைடூரிய நெஞ்சமும் சட்டென கலங்கியது

’’’’கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை,

கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? ’’’

என்றாய்..குரல் உடைந்து..நீர்

தமிழகமே..ஓங்கிக் குரலெடுத்து...
தன் தாய் பிரிவைப் போல உணர்ந்து கதறியது

’’’நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா.. ;’’ என்றாய்

தந்தார் ,,,சென்றார்...தன் இதயம் கோர்த்து இன்றும் காத்து
பேர் பெற்று ..சீர் பெற்று..பட்டொளி வீசுகிறாய்..தமிழே

நீர் தமிழின் ...தேசிய அடையாளம்

உறக்கம் கண்டதில்லை..உம் தமிழ்
சோர்வு கண்டதில்லை..உம் பேனா
சுகம் கண்டதில்லை..உம் இளமை

போராட்டங்களே வாழ்வென எடுக்கும்
சரித்திர துணிச்சல் ..உம் அகவை

எழுமின் விழுமின் இலக்கை அடையும் வரை
ஓயாது உழைமின்...என்பதே உம் வாழ்க்கை...கோட்பாடு

நீர் சந்திக்காத வெற்றியுமில்லை....
உன்னை தோள்தொடாத தோல்வியுமில்லை

எதுவந்த போதிலும்..உம் தமிழ்
இளமை கொஞ்சும் நகைச்சுவை குசும்புகளுடன்

தளராது நடைபோட..தயங்கியதுமில்லை

யாயும் ஞாயும் யாரோ கியரோ? எனும் குறுந்தொகைப் பாடலுக்கு..விளக்க உரைதருவாய்....

கூடல் விழா தொடங்குவதற்கு,
ஊடல்தான் கொடியேற்றி வைக்க வேண்டும்..என்று

மொழிமகளும் நாணி வெட்க ஆடை போர்த்துவாள்
நின் எழுத்தாணி கற்பனையில்..களவு மயங்கி

காதல் அழைக்கிறது,,,கடமை தடுக்கிறது...எனும்
உன் நாவல் 1972 ல்...ராணிமுத்துவில் வெளிவர.......

காதல்சுவையெடுத்த உம் மொழியை ரசித்து ருசித்து
இளமைப்பருவ வாசிப்பில் இன்னும் அதை பொக்கிஷமாய்
பாதுகாக்கும் உள்ளங்கள் ..பல

சாதி மத இனம் கடந்து வாழும் தமிழக சரித்திரமே

கழக வேறுபாடு இல்லாமல்...அனைவரும் ரசிக்கும்
அரும் பெரும் தலைமையே

தமிழ் எனும் சொட்டுத் தேன் ருசி பருக
உன்னை உள்வாங்கி உள்வாங்கி.....ரசிக்கும்..
கோடான கோடி தமிழ்மகன்களின்.....நிகழ்வுத் தேனடையே

பற்றும் பாசமும் .அன்பும் ஆளுமையும்
நிறைந்த.......நேசத் தலைவனே

லட்சக்கணக்கான தொண்டர்களில்...முதலாய்
தானாய் வந்து முன் நிற்க்கும் கழக விசுவாசியே

தமிழையும் தாய்கழகத்தையும்...
தன் உயிரினும் மேலாய்நேசிக்கும் ....உன்னத தலைமகனே

சொல்லம்புகள் பல தாங்கிய போதும்..சோர்வேனா..என
வெற்றி சிறகு விரிக்கும்,.....மணிமகுட மாடப்புறாவே

முக்கடல் சந்திக்கும் ...குமரிக்கடல் நடுவே சென்று
தம் குறள் புலவனுக்கு..சிலை செதுக்கிய ....சீரிளம் தமிழே

சிலேடை மொழியெடுக்கும் இளமை வித்தகமே

நீர் வாழும் காலத்தில்...என் தாய்மடியாம்
தமிழ் மடியில் நான் கருத்தரித்தது..என் பெருமை

நின் வளமையை..எளிமையை...முதன்மையை
மொழிமையை...உள்வாங்கி உயிர் கசிந்து ரசிப்பது...
என் தவப்பயன்

நின்னை எழுத நான் என் பிள்ளைதமிழ் எடுத்தது
என் பிறவி செய்த..புண்ணிய கடமை

தொன்மைத் தமிழின் தெளிவான முகவரி....
எண்..8...கோபாலபுரம் 4வது தெரு....

வரும்தலைமுறைகளுக்கெல்லாம்
வாழும் தலைமுறையாம் தமிழ்மகளின்..கழக கோமகனை

வாழ்த்த வயதில்லை...வணங்கவும் துணிவில்லை
தள்ளி நின்று தனிப்பெரும் சுவாசம் எடுத்து

பெருமூச்சு மறந்து பெருமை பொங்க ரசிக்கிறேன்

தலைவா,,,என்றும் நின் தமிழுக்கு..
நான் அர்ப்பணம்...சமர்ப்பணம்.............கோவே

1 comment:

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..