Saturday 18 April 2015

குணம் நிறை செல்வனே

வான் மேகம் மதகு கட்ட
வள்ளல் குலம் தழைத்தோங்க
வாழைப்பூ மதுரம் சிந்த

வசந்த பொன்விடியலேந்திய
வாகைச்சூரியன் மெல்ல எழும்

அதிகாலை பிரமோற்சவத்தில்
தவமிருக்கும் சிவன் நெற்றிக்கண் திறந்த
நொடியில் கதிரென ஒளி குதித்து
நிறைபனிகுட சிறையுடைத்து உருவெழுந்த கருவே
எங்கள் வம்ச திரு உயிரே.....

எங்க சாரின் இரா. குமார் மகனே....எங்க வீட்டு மருமகனே
முல்லைச்செல்வனே...

இதுபோல் பிள்ளைய உண்டா.....
இப்படியும் பிள்ளை உண்டா...என்றே
அடக்க பணிவு கல்வி கேள்வி ..அறிவு அழகில்
அனைவரும் வியக்கும் வண்ணம் வேள்வி செய்யும்
எங்கள் திருமகனே

யார்மகன் இவரென்று ஊர் சொல்ல ....
இன்னார் தகப்பன் இவரென்று சொல்லுமளவு வரும்
குணம் நிறை செல்வனே
நீர் தவத்திற்கு கிடைத்த வரமா..இல்லை
வரம் தர அவனி வந்த தவப் பிறப்பா

நீ எனில் வளையும் வானம் உம் தகப்பன்
அவரெனில் ஆழ்வேர்தாங்கும் அன்பின்நிலம் நீ

வாழ்வின் அர்த்தம் சொல்ல வந்த வம்சவிளக்கு நீயே
வாழ்வாகிப்போனாய் அவருக்கு...
தாயுமாகி தந்தையுமாகி ஆசானாகி அனைத்தும் காக்கும் தெய்வமுமாகி....உன்னை தன்னின் உயிர் உறைவிடமாய்
இமையணக்கிறார் எங்கள் தமையனார்
அருகிருந்து காணும் எங்கள் அனைவருக்கும் ஆனந்தமகிழ்வும்
அன்புநெகிழ்வும் உங்கள் பிரியங்கள் கண்ணுற...!!

சிங்கத்தின் ஆளுமையில் சிங்க குட்டியாய்..வேர்அடி பாய்ந்து
தோளணைக்கும் தோழனாய் வீற்றிருக்கும்....
வெற்றியின் உயர அடையாளமே.

என்றும் என்றென்றும் அன்னை கொஞ்சும்
ஆனந்தபிரியங்கள் அனைத்தும் சீராடி.....
அன்புநேசமகிழ்வில் நித்தம் நீர் நிம்மதி நீராடி

புகழ்வெற்றி மாலைகளுடன்
நிலம் இருக்கும் வரை நீள் வேரோடி

இன்ப பெருவாழ்வு வாழ இதயம் நெகிழ்ந்து வாழ்த்துகிறேன்.....

இனிய வாழ்த்துக்கள் தம்பி...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..