Friday, 24 April 2015

என் கதிர் அவனே

அன்பே அமிழ்தே ஆழ்நிறை வேதமே
ஊனே உயிரே உயிர் தவ வரமே Kathir Covai

என்னின் பிறந்தநாள் பிரியமே
நினைவே...நிகழ்வே ..என் கதிர் அவனே

கனவே கருணையே...என் கனிக் கொழுந்தே
மன்னவனே மணமானவனே மனநிறை மகிழ்வே

நட்பே நலமே நான்வேரூன்றும் நாநிலமே
சொல்லே பொருளே சொற்றொடர் வாழ்வே

உணர்வே உற்சவமே உயிராடும் பதிநூலே
வண்ணமே வசந்தமே வாழ்நிறை அர்த்தமே

உன்னை வாழ்த்தவா..வணங்கவா...
இறையென துதிக்கவா இமைத்துயிலுறங்கவா

என்னே நான் செய்ய என்நிறை திமிரே

இப்பிறவி என் பிறவி மேன்மையுற ..இன்றே நீ
மண் வந்த மழை நாள்

என்னை
குழந்தையென தாங்குகிறாய் ....அன்னையென ஆனந்தமுறுகிறாய்....தோழியென கர்வம் கொள்கிறாய்
மனைவியென மாண்புறக் காக்கிறாய்..என் விழிகளில் விடிகிறதய்யா..உன் ஒளிப் பொழுதுகள்

என் சிறு முகவாடலில் ஸ்தம்பிக்கிறது உன் அன்றாட நிகழ்வுகள்

நானறியா என் தேவைகளை நீயறிந்தவன்
என்னைசிகரமேற்றி சிரிக்கும் தியாகம் நீ

என்னைக் கொண்டாடும் அனைவரும்
உன்னைப் பார்த்து பழகிய நொடி புரிவர்
நீயில்லா நான் என்பது ஒன்றுமே இல்லைஎன்பதை

என் வீடு என் உறவு என இமைதாங்கிய
23வருட சொந்தங்களை..உன் விரல் பிடித்த நொடி
மறக்கவைக்கும் மயக்ககாந்தம் நீ

என் சுதந்திர வானின் சுந்தரச் சிறகு நீயாய் விரிந்து
நம் உலக சொர்க்கமைக்கும் நேசக்கூடு நீ

நான் என்பதின் ஆணிவேர் அடையாளமே
எத்தனை பிறவி தவம் செய்தேன் ....உன்னுயிரோடு என்னுயிர் நான் கோர்த்து நிறை சரணாகதியடைய

கணவன் கிடைப்பான்..நண்பனென தோளனைப்பான்
உயிரென நிறைவான் உணர்வென காப்பான் எல்லோருக்கும்
ஆனால் நீ அனைத்திலும் மேலான.

என்.ஆதூரமானவன்

தாயாய்..என் தாய் காத்த சேய் நீ
என்மடி விட்டு ..உன் மடி உயிர்விட அவர்களும் தவமேந்தி தான் வந்துள்ளார்கள் ..நீ காத்த பிரியத்திற்க்கு இறுதியில் உன்னை
விழிநிறைத்து தன்விழி வழி..அவர்தம் ஆத்மபிரிவில் ..கத்தி நான் கதறியதை விட..உள் மருகி நீ துடித்த நிமிடங்கள் நீளமானவை

இஃதொன்று போதாதா..இப்போது சொல் என் தேவனே
உன்னை ..இங்கு நான் வாழ்த்தவா..வணங்கவா

என்நிமிர் மொழியின் குழைவேதமே
நீயில்லையேல் நான் என்றுமில்லை..எதுவுமில்லை

அன்னைதந்தவாழ்வே
சுயநலமாய் உன்னைவேண்டுகிறேன்
நான் வாழ நீவாழ் மன்னவா..இந் நிலமிருக்கும் வரை நீள்பிரியமாய்

heart emoticon heart emoticon heart emoticon கதிர் heart emoticon heart emoticon heart emoticon
 — with Meera Blossom,இரா. குமார்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..