Monday, 17 October 2016

ஆதி ரிஷிமூலம்

நதியோடி நிகண்ட நிலத்தில் 
இறகு விரித்த வலசை ஒன்று 
இறக்குமதி செய்த கழிவில்
பழமுத்திய பெருவிதை கழன்று 
மண்நுழைந்து போராடி
வேர் கிளைத்து விருட்சமாக

இலைபரப்பிய
மணங்கண்டு மனதிசைந்த
மகிழ்சோடிகள் இயைபு கண்டு
இனம்பெருக்க...
வெடித்திட்ட வேர்முண்டுகள்
வெயில் உண்டு வெப்ப ஏப்பமிட்ட
பெருமூச்சை ....
ஏந்தித் தாங்கிய முகிலது
கருமையடைந்து கற்பு தவற
வான்கூட்டிய பஞ்சாயத்தில்
பகல்திருடன் தப்பிக்க 
மூலை தேடி அழ நகர்ந்த முகில்
கூர்தீட்டிய முகட்டு மலை குத்தி
தீராக் கண்ணீர் வடிக்க

குழைதல் ப்ரியம் கண்டது
உருண்டு திரண்ட அண்ட விண்கல் 

ஏழ்பிறப்பிற்கும்
என் வாழ்தல்இடம் நீயென
நிர்ணயிக்கிறது
#ஆதி ரிஷிமூலம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..