Sunday 2 August 2015

கிராமசொர்க்க அகதிகளுக்கு

தொழுவ பசு அழைக்க
விழித்தெழும் அம்மாவோடு முழித்து

பஜனை வருவதற்குள்
வாசலடைத்து கோலம் போட
பரபரக்கும் அக்கா

தூங்கி விழும் தம்பி தட்டியெழுப்பி
மஞ்சப்பை கொடுத்து
வயலோரம் பூசணிப் பூ பறிக்க அனுப்பி

பாம்பு நடமாடும் இருட்டில்
அவனும் பயந்து பயந்தே பறித்து வர

எதிர்வீட்டு கன்னியம்மாளை விட
ஒரு பூ அதிகம் கோலத்தில் வைத்த
பெருமிதத்தில்
அக்கா சிலுப்ப

வாடைக்காத்தோடு..வாடிய
வரட்டி பூ ..மேல்தட்டு ஓடு நிறைந்த

மார்கழி காலங்கள் மனசோடு தங்கி

குளிரென இழுத்து போர்த்தி உறங்கும்

நாகரீக நகர இடம்பெயர்தலை
நரகமாய் தந்துவிட்டது

பெருமூச்சு நினைவாற்றும்
கிராமசொர்க்க அகதிகளுக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..