Sunday 2 August 2015

சரித்திரமானது மெல்லிசையின் சகாப்தம்

சரித்திரமானது மெல்லிசையின் சகாப்தம்

உலகை இயக்கும் ஒலி சக்தியை
தன் கரங்களில் எடுத்து
சரிகபதநி எனும் ஏழு சுரங்களில் மீட்டி

வாழும் சரித்திரமானது
பலரின் வாழ்வில் மெல்லிசையாய்
ஸ்வரம் மீட்டிய சங்கீதம்

தமிழின் மொழி
கொஞ்சலாய்
குளிர்ந்தாடும்
சேரநாட்டில் பிறந்து
இலக்கியத்தமிழை ..இசைத்தமிழோடு
இன்னிசையாக்க புறப்பட்டு வந்த
ஆர்மோனிய ஆசான்

பிறப்பிலே கவிஞனனாய்
வாழ்தலில் தத்துவனாய்
நதியோட்ட வாழ்வமைத்து
நான் என்பதின் மொழி தந்த
கவியரசுவின் உற்ற தோழனாகி
உயிர் தந்த இருவரின் பாடல்கள்
இங்கு பலரின் நிம்மதி உறக்கம் தழுவுகிறது
இன்றுமெனில் ..அஃது மிகையில்லை

உம் மெல்லிசையில் மேனி சிலிர்த்து
தன்னிகரில்லா பெருமை உமக்கு சேர்க்கவே
எம் தமிழ்தாய் தன் பெருமைக்கு
உன்னை மெட்டமைக்க வைத்தாளோ
நீராரும் கடலுடுத்த........என்று...

50 களில் ஆரம்பித்து
80 கள் வரை இடைவிடாது ...
சங்கீத கொடிநாட்டி
எவரும் நெருங்க முடியா மணிமுடிசூடி
மகிழ் மொழியை தனதாக்கி
திரைஉலகை திரும்பி பார்க்க வைத்த
திகட்டா சங்கீத இரட்டையர் ....
நீயும் உன் தோழமையும்

மெல்லிசையும் சொல்லிசையும்
இணைத்த பாடலிசை
கவியும் நீயும்

சுவைத்து மகிழும் சுரங்களென
சொல்லிக் கொண்டே போகலாம்
இசைவல்லான் இன்பேர்புகழை

உலகில்
ஒசை ஒலிக்கும் வரை
ஓய்யார சிம்மாசனமிருப்பாய்
ஓங்கு புகழ் பிரம்மனே

வந்தோர் சென்றுவிட
வாழ்ந்தோர் என்று பெயர் பலர் பெற

வாழ்வர் என்றும் நின்று ,...எனதான
பெரும் பெயர் பெற்று

வையகம் வழியனுப்பிவைக்கிராள்
இந்திரசபையில் இன்னிசைதேவனாய்
உன்னை சிம்மாசனமர்த்தி என் தமிழன்னை

வாழ்ந்தனுபவித்து
வாழ்வின் கரைகண்டு
வானோர் புகழ்தாங்கி
வடிவெழுந்து...உயிர்கூடு துறந்த தும்பியே

இன்று
அனைவர் மனங்களிலும்
ஆதங்கமாய் எழும் புண்ணியனே

அவனி மூச்சுள்ளவரை ..
அனைத்து மன மலர்களிலும் ...ரீங்காரமைக்கும்
இங்கு எம்.எஸ்.வி எனும் மூன்றெழுத்து
மெல்லிசை சுவசமாய்

சரித்திரமான சகாப்தத்திற்கு
இருகரமிட்ட
இனிய வணக்கங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..