Sunday 23 August 2015

உயிரே உயிர் கொள்

ஒளியே ஒளிநிறை
உயிரே உயிர் கொள்

நேர்மையையே நிமிர் நில்
திமிரே திமிர் எழு

அன்பே அகிலம் உறை
அனலே அக்னி நிறை

எளிமையே ..ஏற்றம் கொள்

தன் உயிராய் உன்னை போற்றி மதித்து
பேருபெற்ற பெருமைபுகழ் தாங்கிய

பூ உடல் ஒன்று...பூமிநிறைய
வந்துவிட்டது

பொறுமைநிகர் நில மாதாவே
புண்ணிய பிள்ளையொருவன்
மடிநிறையவந்துவிட்டான்
மகிழ்வோடு தாலாட்டு

அன்னையே ..அக்னிசிறகொன்று
அவனி கடமைதீர்த்து
உன் விண்நிறைய
காற்று இடவெளிகளில்..
கால்பரப்பி இடம் ஆக்கிரமிக்க
வந்துவிட்டான்

மிதக்கும் நட்சத்திரம் ஒதுக்கி
எங்கள் மிதவையானவனை நிறை

குருவார திருநாளில்
குருவென அனைவர் அணுசிந்தையிலும்
குணமகிழ் நாயகனாய் வீற்றிருக்கும்

குலமக பாரத ரத்ன ..பவித்திர அடையாளமே

அமரதீபமாகும்..ஆத்ம பிரமமே

முப்புறம் கடல் சூழ்..இந்திய
தீபகற்பத்தை..
உள்ளம் கொந்தளிக்கும்..நால்புறம்சூழ்
கண்ணீர் தீவாக்கி

மூன்றுநாள் கனத்த அமைதியை...
மனம்பிசையும் வேதனையை
முப்பெரும்படைதளபதிகள் வீர வணக்கத்துடன்

எம்பாரத அங்கி
மான மேல்கவசம் போர்த்தி
மூத்தகுடிமகன் உன்னை
அங்கமென வழியணுப்பி

உருகிவழியும் விழிகலங்க
உயிர்சுவாசத்தை....சிந்தையேந்துகிறோம்

வல்லரசு கனவு விதைத்த வீரவிதையே
வளர்திருநாட்டின் ராஜ அங்கமே

சென்று வா....விதைக்கிறோம்

அக்னிச்சிறகொன்றை..அவனி விதைக்கிறோம்

விழித்தெழுந்து விருட்சமாகி..
விழுதுகளாய்
மீண்டும் வேரூன்ற

ஆயுள் எடு ..அவதார..ஆசிரியனே

வீரவணக்கம்...விருது திருமகனே

ஜெய்ஹிந்த் !!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..