Sunday 2 August 2015

இறப்பெனும் மூப்பு போல.

ஆத்தாளும் அப்புச்சியும்
பகுதி நேரம்
அங்கிட்டு தான் பழி கிடப்பாவுக

அப்பாரு தேடி
ஆரு வந்து அமர்ந்தாலும்
மோர் சிலுப்பி வரவேற்பா அம்மை

ஆடுபுலி ஆட்டத்திலிருந்து
சீட்டுக் கச்சேரி வரை
அதுக்கு அம்புட்டு விளையாட்டும் அத்துபடி

அடைமழையையும்
ஆடிக்காத்தையும்
இங்கிட்டு குத்தவைச்சு
இளந்தாரி சுகமா ரசிக்கலாம்

வெக்கையும் வேம்பழமா இனிக்கும்...நிலா ஒளியில
உருட்டு சோறு உண்கையில

அத்தனை சொகுசா இருக்கும்

பல பேர் அமர்ந்து
பல பேர் உறங்கி

பல வீட்டு கதை கண்டு

வீட்டுக்கு வீடு

ஒட்டுவாரொட்டியாஇருந்த
ஒட்டுத் திண்ணை

கண்முன்னே காணாம போயிடுச்சு

இருக்கவர் இருக்க

பார்த்திருக்கும் போதே
பறித்து செல்லும்

இறப்பெனும் மூப்பு போல.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..