Saturday 22 August 2015

பாசவிசை கடத்தி

மழைபிரிய
வானவில் போல்

திடீரென்று
ஒருநாளில்

சமாதானமாகிப்
போகின்றனர்

அதுவரை
அடிதடி சண்டையிட்ட
அக்காளும்
தம்பியும்

துருவம் நகர்கிறது
எதிர்ஈர்ப்பு
பாசவிசை கடத்தி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..