Saturday 29 August 2015

எழுத்தின் மரணம்

எழுத்தின் மரணம் === முதலாம் சின்னதுரை

என்ன ஆச்சு...ஏனிந்த அவசரம் நண்பா...

வால்நட்சத்திரம் ஒன்று வாசல் வீழ்ந்ததாய்
செய்தியறிந்து செயல்துடிப்பறுத்தேன்

எப்படி எப்படி..இஃது சாத்தியம்
என்றே தவிக்குது மனம்

மேடம்...டாக்டர்...என்று கருத்திடல்களில் வந்து
மரியாதை பிரியமாடும் முகம்
மனக் கண்முன் வந்து
உம் அகம் காட்டி .....நிகழ்வாய் இருக்கிறாய் நீ

கேள்விப்படுவதெல்லாம் பொய்யின் கூற்றே
என்றெவரும் பதிவிட மாட்டாரா என்றே
மறுகுகிறேன்

கலங்கும் மனம் ..கண்ணீராய் வராமல்
அழுத்த வலியாய் உறைகிரது

சொல்லும் மொழியும் இன்னும் நீ
எழுத்தணைக்க தவம் கிடக்க

எப்படி எமன் வந்தான் ...நாங்கள்
ஏமாந்த நேரத்தில் உன்னை அழைத்துச் செல்ல

அய்யோ...........எனும் அவலக்குரல்
வெளி எழுப்பாமலே
தொண்டையடைக்கிரதே

கடவுளுக்கு கருணையில்லை என்றே
நிரூபித்து செல்கிறது

நல்மனங்களை...சட்டென்று பறிக்கும்
கழல் வேதனைகள்

வந்தகதை தொட்டு
வாழ்ந்தகதை எழுதி
வாழும் நிகழ்வாய் மனம் வென்ற மனிதனே

நண்பனெனும் ஒளியே

நட்புவிழிகளில் வழியும் ஒவ்வொருதுளியிலும்
வேதனையாய் நிறையும் நல்லுயிரே

’’மொழி’’க்கும்..’’ஒளி’’ க்கும் போல்
என்றும் உனக்கும் இல்லை
ஓர் மரணம்

தீயை...தீண்ட...எத் தீ வரும்

உனக்கு
இரங்கல் மொழி எழுதவா..
இன்றென் பேனா
மொழி மைநிரப்பியது.....

ஆற்றமுடியாத..தேற்றமுடியாத ..
இன்னும் நம்ப முடியாத வேதனை

நிமிடங்கள் யாசிக்கிறேன்....
நிகழ்வை உள்விழுங்க

வாழ்தலில் மனங்களை ஜெயித்து
மரணம் அணைத்தவரே...காத்திருப்போம்
நாங்கள் வாழும்வரை..நல்மன நண்பன் உன்னை
மீண்டும் காண

உயிர்த்தெழு பீனிங்க்ஸாய்..உயர் நண்பனே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..