Friday 12 June 2015

அவளும் ..தாய்மொழிப் பிரம்மனாய் !


அவள் சொல்வதெல்லாம்
உண்மையென
அவளைவிட அனைவரும் நம்பினர்
அவளும் அதையே விரும்பினாள்

காக்கை வெள்ளையென்றாள்
கலரடித்த கவிதையென்றனர்
நிலவு சுடுகிறதென்றாள்
வருந்தாதே வாட்டம்விடு
பூவும் வண்டும் வான் மோதி
மதுசிந்த ..கொல்லாதே
உறங்க இரவு கொடு என்றே தவித்தனர்

மலையும் ..மழையும்
மேடும் பள்ளமும்
காடும் கனியும்...அவளில்
இன்னதென்று பிரியாத
ஓரினச்சேர்க்கை கற்பனையே

இயற்கையெல்லாம் எடுத்து
இன உணர்வு செலுத்தி
நேசித்தலில் நேரினிமை உலகு சமைக்க

தனியொருவளாகிப் போனாள்
படைப்புலகில்
அவளும் ..தாய்மொழிப் பிரம்மனாய் !!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..