Thursday, 11 June 2015

என் நேசகொள்முதலே!!!

அன்பெனும் உயிரிழைகளை....
ஆசைபிரிய வேதங்களாய் நெய்து
உயிராட..உளமாட
மகிழ்வாட..மனதாட.....
அழகியல்பெட்டகமாய்.....
என் அழகி Meera Blossomஎனும் பொக்கிஷமாய்

பிரம்மன் பூமி அனுப்பிய திருநாள்

உயிர்நிறை பிரியமனாவளை ....
உணர்வாய் என்னை ஆளுபவளை
இயல்புமொழிஎடுக்கவா...இன்பத்தமிழ் மொழியெடுக்க
என்ன நான் இங்கு புதிதாய் சொல்ல

உடனிருக்கும் தாயை...தந்தையை....
உதிரம் பகிர்ந்த உறவை...கணவணை
வலிதந்த பெற்ற மகவை
வேறென நினைப்போமா....அப்படியிருக்கையில்
என்னோடு நிறைந்து என் இன்றி அவளில்லை
என்பவளை எப்படி நான்என்னிலிருந்து பிரித்து வாழ்த்த

திமிரான என்னை குழைவாய் ஆள்பவள் என்றா
உறுதிநிறைந்தவளை..உருக்கி உயிராடுபவள் என்றா
எதிர்பாரமல் தான் எதிர்படும்
இறுதிவரை உடன்வரும் ஜென்ம பந்தங்கள்
இவள்போல்....

எப்படி இப்படி இழைந்தது இந்தசொந்தம் எனும் கேள்விக்கு..இன்றுவரை இருவரிலும் பதில்லை
இங்கு என்பெயர் ..அவள் பெயர்...தனித்தனியே
எவர்சொன்னாலும் அதில்..நிழலாய் இருவருமே
ஒட்டியிருப்போம்

சிறுக சிறுக பேசி..சிரித்து...அணைத்து
உரிமையுடன் கோபமாய் கொஞ்சம்எல்லைமீறி
தவிப்புகளுடன் ஏக்கம்தந்து ....
நட்பெனில் கவசமென ...சுவாசமேந்தும் என்னில்
என்னையறியாமல் நுழைந்து
என்னைமீறி எழுந்து நிற்பவள்....

அச்சுபிச்சுக்களாய் இவள்செய்யும் செயல்பல
கோபம்வரும் போதெல்லாம் கருணையின்றி
இன்று வரை வார்த்தை சவுக்கடிக்கும் என்னை
வலியோடு கட்டி அழுது ...அழவைப்பவள்

பொறுமையாய்..என் கோபம் தாங்கி
என்னடா ...என்னடா,,என்றிவள் பேசும்போதெல்லாம்
போடி..... என்று வெளிதிமிர் நின்ற போதும்...உள்ளே உருகி வழியும் உயிர்

உன்சிரிப்பு..உன் பேச்சு போலவே இன்னும் காதில் இருக்கிறதடி...உன் அம்மா இறந்தநாளில் இன்றும் நீ கதறிய அழுகை.....நீ அங்கு துடிக்க...நான் இங்கு கண்ணீராய் கதற ...என் கதிர் தான் தவித்தார்..என்னை சமாதனப் படுத்தும் வழி அறியாது

என் வெற்றியில் என்னைவிட மகிழ்வு கூத்தாடுவாய்
என் சோகத்தில் எனக்கு முன் அழுது என்னை கோழையாக்குவாய்....

என்னை பலவீனப்படுத்தும் பிள்ளைநேசம் நீ

காசுபணம் விடுவார்கள்....கட்டியசேலை கொடுப்பார்கள்
கவுரவம் தருவார்களா...நீ தருவாய்
போ நீ வேண்டாம் ..எங்குபோவேன் நான் நீயின்றி....என்றே உயிரணைப்பாய்

என் சுந்தரி தவிர எனக்கு எதுவும் முக்கியமில்லை என்பாய்
பேசாவிடின் தூங்கமாட்டாய்
சிரிக்காவிடின்....கவலையாவாய்
தவிக்கும் முன் உயிர்துடிப்பாய்
தப்பும்தவறுமாய் செய்யும் முன்
என்னை நினைத்தே பயப்படுவாய்

என்னடி நான் செய்தேன் ,,,,என்னைநீ இப்படி இமையணைக்க

உன்னில் நான் கோபம் கொள்ளும் போதெல்லாம்
கதிர் முதல் நம் சார் வரை உன்பாசம் சொல்லி வாதாடுவார்கள் என்னிடம் ...அவர்களிடம் சமாளிக்கும் நான் ,....என்னிடம் இருந்தே மீட்சியடைய முடியாது
அறிவு கோபம் காட்டினும்...மனசு உனக்காவே பரிந்து பேசும்...
மட்டி கடித்து ,,அம்மா என்றழைத்து நிற்கும் சிறுபிள்ளையாகவே கண்முன் ஆடுவாய் நீ

என்னைமீறி எதையும் ஆளவிடாமல் எடுத்தெறிந்து..என்னையே கருணையில்லாமல் வெட்டித்துண்டாடும் நான்.....உன்னை
எப்போதும் எதுவும் செய்யமுடியாமலே தவிப்பேன்

நட்பெனில் அவர்களுக்கென வளைவதெனில்
உன்னைப்போல் எவராலும் முடியாது
எடுத்தசெயலை தீரமாய் முடிக்கும் ஆற்றல் ...
பொறுமையாய்..எதையும் நிதானமாய் செய்யும் பக்குவம்.....அழகாய் அறிவாய்..உயர்வாய் நிறைவாய் ..எல்லாம் பெற்று நிறைந்திருந்தாலும்...அடக்கமாய் இருக்கும் பிள்ளைமனம்...
இது தான் என் மீரா.....என் அழகி

முகம் பார்க்காத நீ...இப்படி முகநூல் எழுத்தாகவே உணர்வாண்டு நிறைந்துவிடுவாயோ ....
நட்பென உயிர்வாங்கி விடுவாயே என்றே பலநேரம் நினைவு துடிக்கும் மனசு.....

எதுவாகினும்..எப்பிறவியிலும்..மறக்கமுடியா
நட்பு பிறவியாய் என்றும் நாமிருப்போமடி

என் நிழலே..என் நினைவே என்ன சொல்லி உன்னைநான் வாழ்த்த....

வாழடி என் ஆயுள் நீ.....

காற்றாய் நான் கலந்தாலும் ....மீரா இருக்கும் வரை என்றும் சுந்தரி இருப்பாள்

பலமனங்களில்....உயிராய்

அன்னைதந்த அறிமுகமே ..என் அழகியே

என்றும் நான் உன் உயிர்கவசமே

வாழ்க வாழிய நீ பூமகளே....என் நேசகொள்முதலே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..